பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஓங்கி உலகளந்த உத்தமன்

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீ ராடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள, பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

மேலைப் பாசுரத்தில் பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடி பாடியவர்கள் இப்பொழுது “ஓங்கி உலகளந்த உத்தமன்” அடியைப் பாடத் தொடங்கினார்கள். ஓங்கி உலகளந்த உத்தமன் என்ற தொடர் ஒர் உயர்ந்த உள்ளிட்டினைக் கொண்டுள்ளது. வாமன அவதாரத்தை இத்தொடர் குறிப்பிடுகின்றது. குள்ளனாக வந்து, செருக்குற்றுத் திரிந்த மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டான் மாயோன். மூன்றடி மண் தர இசைந்து வாமனனின் கையில் மாவலிச் சக்கரவர்த்தி அர்க்கிய நீர் வார்த்துக் கொடுத்த உடனே நெடிய வடிவம் கொண்டு ஓங்கி ஒரடியால் மண் அளந்து, ஈரடியால் விண் அளந்து, மூவடிக்கு மண்ணில்லாமல் மாவலிச் சக்கரவர்த்தியின் தலையையே அழுத்தியவன் வாமனன் ஆவன். குள்ளனாய் வந்து கள்ளனாய் நின்று திருவிக்கிரம அவதாரம் எடுத்த திருமாலின் சீரினை எடுத்த எடுப்பிலேயே ஓங்கி உலகளந்த உத்தமன் என்று பாடுகிறார்கள். பிறருக்காகத் தன் வடிவைக் குறுக்கித் தேவர்களையும் மனிதர்களையும் வாழ்வித்த திறத்தால் நெடுமால் ‘உத்தமன் ஆகிறான். தான் அழியத் தான் மாறியாகியும் பிறர் வாழ வேண்டும் என்று பணி செய்பவனே உத்தமன் என்கிறார் வியாக்கியான சக்கர