பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Is) திருப்பாவை விளக்கம்

வர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை. அந்த வகையில் உத்தமனாய் - ஓங்கி உலகளந்த உத்தமனாய் விளங்குகிறான் கண்ணன். அவனுடைய திருப்பெயரைச் சொல்வதும், கல்யாண குணங்களை உவந்து உவந்து போற்றுவதும் பெரும் பயன் நல்குவதாகும். எனவே வாமனனாய் வந்து மாவலியை வதம் செய்த கண்ணனுடைய திருப்பெயரைப் பாடிக் கொண்டே - பவகத் நாம ஸங்கீர்த்தனம் செய்து கொண்டே - நீராடி நோன்பு நோற்கிறார்கள். இவ்வாறு உத்தமன் பேர்பாடிப் பாவை நோன்பு மேற்கொண்டால் விளையும் பலவகை வளங்களையும், நலன்களையும் இனித் தொகுத்துக் கூறப்போகிறார்கள். முதலாவதாக நாடு செழிக்க - நல்ல படியாக இருக்க வேண்டுவது மழை! எனவே தான் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான் சிறப்பு என்னும் அதிகாரத்தை வைத்தார். மழை இன்றேல் பசும் புல்லும் முளைக்காது என்றும், கடவுளுக்குப் பூசை முறையாக நடைபெறாது என்றும் திருவள்ளுவர் சொன்னார். நாட்டில் எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும். கள்வராலும், கொலை மேற்கொள்பவராலும் நாட்டில் தீங்கு நேரிடலாம். வறுமையாலும், நோயாலும் வாழ்க்கை வற்றியும், நொடித்தும் ப்ோய்விடலாம். எனவே ஒரு நாடு தீங்கற்று இருக்க வேண்டியது அவசியமாகும். தீங்கில்லாமல் ஒரு நாடு இருந்துவிட்டால் மட்டும் போதுமா? அந்த நாட்டில் திங்கள் மும்மாரி பெய்தால்தான் வளம் வந்து சேரும். பழங்காலத்தில் வேதியற்கோர் மழையென்றும், நீதி உடைய அரசர்க்கோர் மழையென்றும், கற்புடைய மகளிர்க்கோர் மழையென்றும் சொன்னார்கள். ஒன்பது நாள் வெயிலும், ஒரு நாள் மழையுமாக மாதத்தில் மூன்று நாள் மழை பொழிய வேண்டும் என்றார்கள். ஏனென்றால் மூன்று நாள் தொடர்ந்து அல்லும் பகலுமாக மழை பெய்து நாடெல்லாம் வெள்ளக்காடாகிப் போகுமானால் அதனால் மக்களும் விலங்குகளும் துன்பமே அடைவர். தொடர்ந்து ஒரு