பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IAE திருப்பாவை விளக்கம்

என்பது ஒர் அழகான இயற்கை வருனனைச் சித்திரமாகும்.

பிறிதொரு காட்சியினை நம் கண்ணைக் கவரும் வகையிலும் நம் எண்ணத்தில் சிறந்து நிற்கும் நிலையிலும் கோதை நாச்சியார் கொண்டுவந்து காட்டுகின்றார். ஆய்ப்பாடியில் உள்ள பசுக்கள் வள்ளல்பெரும் பசுக்கள் ஆகும். ஏன்? பசுக்களின் மடியிலிருந்து பால் சுரக்கும் இடையர்கள் சலித்துக் கொள்ளாமல் ஒரு நிலைப்பாடுடன் கூடிப் பசுக்களின் பருத்த மடிகளைப் பற்றி இழுக்கிறார்கள். இழுத்த அளவிலேயே குடம் பாலால் நிறைந்து விடுகிறது. ஒரு குடமா? இரு குடமா? இல்லை இல்லை. குடங்கள் நிறைந்து விடுகின்றன. பசுக்காம்புகளின் அடியில் மாற்றி மாற்றிக் குடத்தைக் கொண்டுவந்து வைக்கிறார்கள். குடங்கள் பாலால் நிறைந்து விடுகின்றன. ஒரு பசுவே பல குடங்கள் நிறையப் பால் சுரக்கின்ற வண்மை மிக்க பெரும் பசுக்களாய்த் திகழ்கின்றன. பசுவின் பாலைக் கரக்கும் இடையர்களும் அனுபவப்பட்டவர்கள். பசுக்களிலே இருந்து பக்குவமாகப் பால் கறக்கிறார்கள். பருத்த காம்புகளிலிருந்து பால் பீறியடிக்கின்றது. குடங்கள் நிரம்பி வழிகின்றன. இங்கே ஒர் தத்துவக் கருத்தும் தொக்கி நிற்கின்றது. பசுக்களின் மடியைக் கறப்பது போல ஞானாசிரியனின் அடியைப் பற்றிக்கொண்டு ஞானப்பால் கறக்க முயல்பவனே சீடன் என்பது பெறப்படுகின்றது. எனவே வள்ளல் பெரும் பசுக்களை ஞானத்தை வழங்கும் நல்லாசிரியர்களாகக் கொள்ளலாம். பசுக்கள் பாலால் குடம் நிறைந்ததுபோல் ஆசிரியனும் ஞானத்தால் சீடனின் மனத்தை நிறைவிக்க வேண்டும் என்பதும் பெறப்படுகின்றது. இவ்வரிய காட்சியை வருணித்து நிற்கும் ஆண்டாளின் அழகுணர்ச்சியினைக் (aesthetic sense) #Taotaurite. இப்படிப்பட்ட பசுக்களின் செல்வத்தை நிறைந்த அளவுபெற்றுப் பாவை நோன்பை மேற்கொள்ளலாம் என்கிறாள் ஒருத்தி.