பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 19

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிப் L / TøW)3) | நோன்பை மேற்கொண்டு மார்கழி நீராடினால், திங்கள் மும்மாரி பெய்து நாடு செழிக்கும்; அதன்வழி நீர்வளம் மிகுந்து, நெல்வளம் சிறந்து, பசு வளம் பரந்து, பால் வளம் பல்கிக் காணப்படும் என்பது இப்பாட்டால் பெறப்பட்ட

கருத்துகளாகும்.

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீ ராடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து,

ஒங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள, பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)