பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆழிமழைக் கண்ணா

ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல், வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

நான்காவது திருப்பாசுரத்தில் ஆய்ச்சியர்கள் மழைக்கு அண்ணலாகிய தேவதையைக் குறித்துப் பாடுகிறார்கள். இந்தப் பாசுரத்தில் மழைக் கடவுளை வேண்டி மழையைக் கேட்கவில்லை. அம்மழைக் கடவுளுக்குக் கட்டளை இடுவது போலப் பேசுகிறார்கள். ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்’ என்று தொடங்குகிறார்கள். மழைக் கடவுளே நீ ஒன்றும் கை இருப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாத வள்ளல்போல் மழை பொழிய வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள். கைகரவேல்’ என்பதற்குக் கருமியாக இருக்காதே! வள்ளலாய் இரு’ என்று பொருள் கொள்ளலாம். கையில் உள்ளதை மறைக்காதே என்பது நேர்ப்பொருள். ஒன்றும் நீ கைகரவேல் என்பதனால் எதையும் சிறிது கூடக் கையிலிருந்தும் மறைக்காதே என்பதும் பொருளாகும். மழைக் கடவுளே! நீ வள்ளல் தன்மையோடு வாரி வாரி வழங்க வேண்டும் என்று ஆய்ச்சியர்கள் ஆழி மழைக் கண்ணனுக்குக் கட்டளையிடுகின்றார்கள்.

இனி, அவன் செய்ய வேண்டிய செயல்களை இவர்களே பட்டியல்போட்டுக் காட்டுகிறார்கள். நீ *...* L1- (り

முதலாவதாகக் கடலுக்குச் செல்வாயாக! அக்கடலுள் புகுந்து அந்த வெள்ளத்தை அப்படியே முழுவதுமாக முகந்து