பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 21

கொண்டு வரவேண்டும் என்கிறார்கள். உப்புத் தண்ணிரைக் குடிக்கும் நன்னிராக்கி வழங்கு என்னும் உட்கருத்தும் இத்தொடரில் பொதிந்துள்ளது. நீ அடக்க ஒடுக்கத்தோடு இல்லாமல் பொழியும் பொழுது பெருமுழக்கத்துடன் பெருமிதமாக வான வீதியில் செல்ல வேண்டும் என்கிறார்கள். ஆழியுள்புக்கு ஆர்த்தேறி உன் கரிய மேனியில் அழகு மேலும் கறுத்து விளங்க வேண்டும் என்கிறார்கள். ஊழி முதல்வன் - திருமால் எவ்வாறு நீலமேக சியாமள வண்ணனாக இருப்பானோ அதுபோல உன்னுடைய உருவமும் நன்கு கறுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். ’கறுப்பழகு பெற்று மேனி சிறந்தவன் கண்ணன். அதுபோல மேகமாய் நீயும் மேனி கறுத்துச் சிறக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்ச்சியர்கள். மெய் கறுத்த பின்னர் வலிமை பொருந்திய அழகிய தோள்களை உடைய பத்மநாபன் கையில் விளங்குகின்ற சக்கராயுதம் போல மின்னவேண்டும் என்கிறார்கள். பத்மநாபனுடைய பிறிதொரு கையில் இடம்பெற்றுள்ள வலம்புரிச் சங்கு போல இடைவிடாது ஒலிக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் அப்பெருமாள் கையில் உள்ள சார்ங்கம் என்னும் வில் உதைத்துத் தள்ளிய அம்பு மழை போல, மழை பொழிய வேண்டும் என்கிறார்கள். உலகத்துள் உள்ளவர்கள் எல்லாம் வாழ மழை பொழிய வேண்டும் என்கிறார்கள்.

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய்!

‘மழையே உலகத்தவர் வாழவும் ஆய்ச்சியர்களாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் பொழிவாயாக என்று மழைக் கடவுளுக்குக் கட்டளை இடுகிறார்கள். கிருஷ்ண