பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருப்பாவை விளக்கம்

பகவானுடைய பரம பக்தைகளாக விளங்கும் ஆய்ச்சியர்கள் கண்ணனுடைய மேனி நிறம், சங்கு சக்கரங்கள், சார்ங்கமாகிய வில், அம்பு மழை ஆகியவற்றை நினைவூட்டுகிறார்கள். திருமாலைப் போல மேகம் கறுப்பும், அவன் கையில் உள்ள சக்கராயுதம் போல் மின்னும், பிறிதொரு கையில் உள்ள வலம்புரி சங்குபோல் ஒசையும், கையில் உள்ள சார்ங்கமாகிய வில்லிலிருந்து புறப்படும் அம்புபோல் வானத்திலிருந்து பொழியும் அடை மழையும் ஈண்டு நினைக்கத்தக்கன. திருமாலுடைய அன்பு மழை போல உலகத்தவர் எல்லாம் வாழ மழையே நீ பெய்திட வேண்டும். நாங்களும் மார்கழி நீரினில் மகிழ்ந்து ஆடவேண்டும் என்று ஆய்ச்சியர்கள் கண்ணனுடைய அருளை வேண்டிப் பாடிப் பரவி நிற்பதை இந்தத் திருப்பாவை புலப்படுத்தி நிற்கிறது.

ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல், வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)