பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மாயனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை, தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது,

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,

தீயினில் துரசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

சென்ற பாசுரத்தில் கண்ணபெருமானின் கணக்கிலாத கருணைத் திறத்தையும், ஆற்றலையும் புலப்படுத்திய ஆய்ச்சியர்கள் இந்தத் திருப்பாசுரத்தில் அவனுடைய அளவிலா அருள்திறத்தினை மேலும் விவரிக்கின்றார்கள். திருமாலின் திருப்பெயரைப் பலமுறைப் பன்னிப் பன்னிப் பேசி மகிழ்கின்ற போக்கு இப்பாடலில் வெளிப்படுகின்றது. தொடக்கத்திலேயே மாயனை மன்னு வட மதுரை மைந்தனை’ என்று விளிக்கின்றனர். மாயனாக இருந்து நம்முடைய பாவங்களையெல்லாம் மாய்ப்பான் என்னும் உட்பொருள் தொடக்கத்திலேயே பெறப்படுகின்றது.

இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை; வியப்பானவை. நேயனாக விளங்குகின்ற மாயன் நல்வழி காட்டும் நாயகன் என்பதனை முதற் சொல்லிலேயே குறிப்பிட்ட ஆய்ச்சியர் மன்னு வடமதுரை மைந்தன் என்று மேலும் கூறுகின்றனர். மன்னுதல் என்றால் நிலை பெறுதல் என்பது பொருள் நிலை பெற்ற வடமதுரையில் பிறந்த மைந்தன் என்பது இத்தொடரின் பொருள். மைந்து என்றால் வலிமை என்பது பொருள். கண்ணன் பிறக்கும் போதே கம்சனின் சிறையில் இருந்த அவனுடைய தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று