பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருப்பாவை விளக்கம்

முறிந்து போய்விட்டன. “தந்தை காலின் பெரு விலங்கு தான் அவிழ, நல்லிருக்கண் வந்த எந்தை” என்னும் தொடரை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்த வடமதுரை மைந்தன் பருவம் வாரா அளவிலேயே அசுரர் குலத்தில் உதித்த தன் மாமனாகிய கம்சனை வதைத்த மிடுக்கினைக் காணலாம். மாயன்’ என்றும் வடமதுரை மைந்தன்’ என்றும் சொன்னவர்கள், மூன்றாவதாக, “தூய பெருநீர் யமுனைத்துறைவன்’ என்றும் சொல்கிறார்கள். யமுனை என்றாலே கருமை என்பது பொருள். யமுனை நதி கரிய நிறம் வாய்ந்தது. அந்த யமுனைத் துறைவன் கண்ணனே ஆவன். தூய்மை உடைய வெள்ளம் பரந்து பாயும் யமுனை ஆற்றங்கரையிலே அவன் ஆடிப் பாடி மகிழ்ந்தவன். எனவேதான் துய பெருநீர் யமுனைத் துறைவன்’ என்றனர். “ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு என்பது நான்காவதாக அவர்கள் மொழியும் திருநாமப் பெருமையாகும்.

‘குற்றம் ஒன்றில்லாக் கோவலர்’ என்று இடையர் குலம் புகழ்ந்துரைக்கப்பட்டது. தமிழின் முதற் காப்பியமாம் சிலப்பதிகாரத்திலும், இடையர் குலத்தின் ஏற்றம் இளங்கோவடிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வன்னிலமாம் குறிஞ்சிக்கும், மென்னிலமாம் மருதத்திற்கும் இடைப்பட்ட நிலமாம் முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ‘இடையர்’ எனப்பட்டனர். இவ்விடையர்கள் ஆக்களை மேய்த்தலால் ஆயர் எனப்பட்டனர். அந்த ஆயர்குலத்தில் தோன்றிய நந்தகோபன், யசோதை ஆகியவர்களால் ஆயர்பாடியில் வளர்க்கப்பெற்ற அருஞ் செல்வனே கண்ணன் ஆவன். ஆயர்குல அணி விளக்கு என்று கண்ணன் அழைக்கப்படுவதிலே ஒரு பொருள் உண்டு. ஆயர் குலத்திற்கே விளக்காக இருக்கிறான் என்பதற்கு மேலும் ஒர் உட்பொருள் இத்தொடரில் புதைந்து கிடக்கின்றது. வேதம் ஒதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்து ஆயர்கள்