பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 2.5

கண்டுகொண்டார்களாம், என்னும் கூற்றில் கண்ண பெருமானின் செளலப்பியம் - எளிமை புலப்படுத்தப் படுகின்றது. ஐந்தாவதாக “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்’ என்று பரவிப் போற்றுகிறார்கள். திருமறைக்கும் எட்டாதவன் யசோதை கட்டிய கயிற்றில் கட்டுப்பட்டான் என்பது விளங்கத் தாமோதரன் என்ற சொல் பெய்யப்பட்டுள்ளது. கயிற்றுத்தழும்பை வயிற்றில் உடையவன் என்னும் விளக்கத்தை உள்ளடக்கி நிற்கும் சொல்லே தாமோதரன் என்பது. யசோதை கட்டிய கயிற்றால் தன் வயிற்றில் தழும்பு ஏற்படக் கண்ணன் ஆயர்பாடியில் வதிந்தான் என்பது கண்ணனுடைய பாலசரிதம் ஆகும். கண்ணனுடைய எளிமைக்குச் சான்றாக அவனுடைய வயிற்றுத் தழும்பு திகழ்கின்றது. தன்னுடைய பிறப்பினால் தன்னைப் பெற்ற வயிற்றுக்குப் பெருமை சேர்த்தவன் என்பது தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்ற தொடரால் பெறப்படுகின்றது. தன் வயிற்றுத் தழும்பினால் தாயை வாழ்வித்து உலகையும் வாழ்வித்தவன் தாமோதரன்.

இனி ஒருமுறை அவனுடைய திருப்பெயர்களை ஒருங்கே பார்ப்போம்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா

மோதரனை....

தாங்கள் நாட்காலே நீராடித் துயவர்களாய் வந்தத னையும், தூய மலர்கள் தூவித் தொழுததனையும், வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்ததனையும் எடுத்துச் சொல்கிறார்கள்.