பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2s, திருப்பாவை விளக்கம்

இவ்வாறு அகத்துாய்மையோடு அன்பு செலுத்தினால் ஏற்கெனவே செய்த பிழைகளும் இனிமேல் ஏற்படக்கூடிய பிழைகளும், தீயினில் பஞ்சு போலத் தீய்ந்து விடும் என்று சொல்கிறார்கள். இதனால் முற்காலத்தே அறியாமல் செய்த பிழைகளும், பிற்காலத்தே நேரக்கூடிய பிழைகளும் கண்ணனுடைய திருப்பெயர்களை முறையாக உச்சரித்தால் போய்விடுவதோடு புது வாழ்வு பெறலாம் என்னும் நம்பிக்கையை ஊட்டுவது போல் ஆய்ச்சியர் பேசுகின்றனர். இத்திருப்பாசுரத்தின் வழி, திருமாலின் திருப்பெயர்களைச் சொல்லிக் கொண்டு, பாடிப் பரவிக் கொண்டு, நோன்பு நோற்று, அவனுடைய அடிகளை அடைய முடியும் என்பதனை உறுதியாகக் கூறுகிறார்கள் ஆய்ப்பாடிப் பெண்கள்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை துளய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அனிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை, துரயோமாய் வந்துநாம் தூமலர்து வித்தொழுது,

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய். (ஏ