பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருப்பாவை விளக்கம்

பாடினார். அவ்வகையில் ஆண்டாள் பாடிய திருப்பள்ளியெழுச்சியாகப் பின்வரும் பத்துப் பாசுரங்களும் அமைகின்றன. ஏற்கெனவே படுக்கையில் இருந்து விழித்துக் கொண்டவர்கள் கூட்டமாகக் கூடி வந்து இன்னும் படுக்கையைவிட்டு எழாதவர்களுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதைப் போலப் பாடித் துயில் எழுப்புகிறார்கள். பெரும்பாலும் இப்பத்துப் பாசுரங்களும் நாடகப் போக்கிலும், உரையாடல் அமைப்பிலும் சிறந்து விளங்குகின்றன.

இனி, ஆறாவது திருப் பாசுரத்தைக் காண்போம். முன்னமே துயில் உணர்ந்து வீதி வழியே வருகிற ஆய்ச்சியர் கூட்டத்தில் ஒருத்தி, இன்னும் படுக்கையை விட்டு எழுந்திராத ஒருத்தியை எழுப்பும் போது புள்ளும் சிலம்பினகாண்’ என்கிறாள். விடிந்தும் விடியாத காலையில் என்னை எழுப்ப வந்து விட்டீர்களோ? என்று வீட்டின் உள்ளே படுக்கையில் படுத்துக்கிடப்பவள் கேட்டதாக எண்ணிக்கொண்டு, வெளியே இருப்பவள் அதற்கு மறுமொழி கூறும் போக்கில் இப்பாசுரம் அமைந்துள்ளது. பொழுது விடிந்ததற்கு அடையாளமாக, முதல் சாட்சியாகப் பல்வேறு பறவைகள் கூவுதலைச் சுட்டிக் காட்டுகின்றாள். இரண்டாவது சாட்சியாகப் புள் அரையன் கோயிலில் - கருடனுக்குத் தலைவனான திருமால் - பெருமாள் கோயிலில் வெள்ளைச் சங்கு ஊதுகிறார்கள். அதனைக் கேட்க வில்லையா? என்கிறாள். இதனையே “வெள்ளை விளி சங்கின் பேரரவும் கேட்டிலையோ’ என்கிறாள். வைகறையில் “வாருங்கள், கோயிலுக்கு வாருங்கள், பெருமாள் கோயிலுக்கு வாருங்கள்” என்று எல்லோரும் கேட்கும் வண்ணம் பெரும் சத்தத்தோடு வெள்ளைச் சங்கு ஊதப்படுகின்றதாம். எனவே அச்சங்கு விளிசங்கு எனப்பட்டது. இவ்வாறு பெருமாள் கோவில் சங்கு முழக்குகின்ற பேரோசை உன் காதில் விழவில்லையா என்று வெளியில் கூட்டமாக இருப்பவர் களில் ஒருத்தி கேட்கிறாள். பறவை கூவுதலையும், சங்கு