பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 2』

கூவி அழைத்தலையும் குறிப்பிட்ட பின் பிள்ளாய் எழுந்திராய் என்கிறாள். மூன்றாவதாக ஹரிஹரி என்று தவ முனிவர்களும், தவஞானச் சிரேட்டர்களும், யோகிகளும் சொல்லிக் கொண்டே துயிலுணர்ந்து எழுந்திருக்கும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா என்று கேட்கிறாள். இந்தப் பாசுரத்தில் ஆயர்பாடியில் கண்ணன் இளவயதில் நிகழ்த்திய சில அற்புதச் செயல்கள் விவரிக்கப்படுகின்றன.

கம்சன், தன் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பான் கண்ணன் என்ற சோதிடர் வாய்மொழியினைத் தேறி, கண்ணனை வஞ்சனையாக அழிக்கப் பல்வகை உபாயங்களை மேற்கொள்கின்றான். பூதனை என்னும் பேய் மகளை அனுப்பி அவளைக் கொண்டு ஆயர் பாடியில் வளரும் கண்ணனுக்குப் பாலூட்டச் சொல்கிறான்.கொடிய விஷம் தோய்ந்த பாலினைத் தன்மார்பகத்தே கொண்டிருந்த பூதனையைப் பால் குடிப்பது போலப் பாவனை செய்து கண்ணன் கொன்றுவிடுகின்றான். அடுத்துக் கள்ளத்தனமாக அசுர ஆற்றல் பெற்று வண்டி வடிவில் வந்த சகடா சூரனைக் கட்டு அழியும்படித் தன் காலால் ஓங்கி உதைத்து அழிக்கிறான் கண்ணன். பாற்கடல் வெள்ளத்திலே ஆதிசேஷன் என்னும் பாம்பாகிய படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கின்றான் பாரளந்த பரந்தாமன். அறி துயில் கொள்கின்ற அந்த அரியினை முனிவர்களும், யோகிகளும் வைகறையில் துயில் உணர்ந்து எழுந்து ஹரி ஹரி என்று வழுத்துகின்ற பேரொலி உன்னுடைய உள்ளத்திலே புகுந்து அதனால் உன் உள்ளம் குளிர்ந்து எழுந்து வருவாயாக என்கிறாள். இனிப் பாசுரத்தைக் காண்போம்.

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்

யோகிகளும்,