பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருப்பாவை விளக்கம்

மெள்ள எழுந்தங் கரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

எனவே இத் திருப்பாசுரம், பொழுது புலர்ந்து விட்டது என்பதற்குப் பறவைகள் ஒலி எழுப்பியதனையும், பெருமாள் கோயிலில் 55 IT ՅՆ) ՅՆ) வேளையில் ஒலிக்கின்ற சங்கொலியினையும், அரிநாமத்தைச் சொல்லிக் கொண்டே எழுகின்ற பெரியவர்களின் நிலையினையும் குறிப்பிட்டு இந்த மூன்று அடையாளங்களையும், அறிந்துணர்ந்த பிறகாவது நீ எழுந்திருக்க வேண்டும் என்பதனை வெளியே இருக்கும் ஒருத்தி, வீட்டின் உள்ளே படுத்திருக்கும் ஒருத்திக்குச் சொல்லும் போக்கில் அமைந்துள்ளது எனலாம்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம்

கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்

யோகிகளும், மெள்ள எழுந்தங் கரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)