பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கீசுகிசு என்று

கீசுகி சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து

பேசின. பேச்சரவம் கேட்டிலையோ

பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால் ஒசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

மேலைப் பாசுரத்தில் கண்டது போலவே கிருஷ்ண பக்தியில் திளைத்த ஒருத்தி, அந்தப் பக்தி மயக்கத்தில் படுக்கையில் மெய்மறந்து படுத்துக்கிடக்கிறாள். புரண்டு புரண்டு படுக்கிறாள். இன்னும் துயிலுணரவில்லை. பொழுது விடிந்தது என்று கூடத் தெரியவில்லை. எனவே, ஆய்ச்சியர்கள் கூட்டமாக வந்து வீட்டின் வெளியே நின்றுகொண்டு பொழுது விடிந்து விட்டது, எழுந்து வா என்று கூப்பிட்டும் இவள் எழுந்து வரவில்லை. உள்ளிருந்து கொண்டே ‘விடிந்ததற்கு அடையாளம் தான் என்ன? என்று ஒரு வினா எழுப்புகின்றாள். எனவே, இப்பொழுது வெளியில் நிற்பவர்களுள் ஒருத்தி, அவள் வினாவுக்கு விடை கூற முற்படுகின்றாள். கீச்சாங்குருவி “கீச்சுக் கீச்சு’ என்று பேசிக் கொண்டிருக்கிறதே, அந்த அடையாளம் தெரியவில்லையா? என்று கேட்கிறாள். கீச்சாங்குருவி - ஆணைச்சாத்தன் தன்னுடைய பெண் குருவியுடன் சேர்ந்து பேசும் பேச்சு கீச்சுப் பேச்சு எனப்படுகின்றது. அந்தக் கீச்சுப் பேச்சு கேட்கவில்லையா என்று கேட்கிறாள். அதைக் கேட்டுங்கூட உள்ளே இருப்பவள் எந்த ஒர் அசைவுமின்றி வாளாக் கிடக்கின்றாள். வினா விடுத்தவளுக்கு விடை