பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருப்பாவை விளக்கம்

விடுத்தும் - அவள் விழித்திருந்தும் மறுமொழி புகலாமல் இருக்கின்றாளே என்று வெளியே இருப்பவளுக்கு வெகுளி ஏற்படுகின்றது. அந்தக் கோபத்தைப் பேய்ப்பெண்ணே என்று உள்ளே இருப்பவளைக் கூப்பிட்டுப் புலப்படுத்து கின்றாள். கோபமாகப் பேசி விட்டோமே, உள்ளே இருப்பவளை எப்படியாவது சமாதானப்படுத்தி மார்கழி நீராடலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே என்று எண்ணியவளாய், வெளியே இருப்பவள் காலைக் காட்சிகளை எடுத்து மொழிகின்றாள்.

முதலாவதாக, நறுமணம் கமழும் எண்ணெய் பூசிய கூந்தலை உடைய ஆய்ச்சியர்கள் மத்தினால் தயிர் கடையும் ஓசை உன் காதில் விழவில்லையா? என்று கேட்கின்றாள். அமைதி கொலுவீற்றிருக்கும் வைகறை வேளையில் அவ் அமைதியைக் குலைத்துக் கொண்டு எழுகின்றது ஆய்ச்சியர் தயிர் கடையும் ஒசை வெண்மையான தயிரை வன்மையான மத்து கொண்டு கடைகின்ற பொழுது எழும் ஒசை ‘மலையிட்டுக் கடலைக் கலக்கினாற் போல’க் காதில் எல்லோருக்கும் விழுகிறதே! உன் காதில் விழவில்லையா? என்கிறார்கள். இந்த ஆய்ச்சியர் தங்கள் மார்பில் காசுமாலை என்ற அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் அணிந்திருக்கிறார்கள். ஆய்ச்சியரின் இரு கைகளும் முன்பின்னாக மாறித் தயிர் கடையும் பொழுது அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் கலகலவென்று ஒலி எழுப்புகின்றன.

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால் ஒசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

இன்னும் உள்ளே இருப்பவள் மறுமொழி பேசவில்லை. எனவே, அவளை அமைதிப்படுத்த வேண்டும் என்று கருதி