பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 3.3

‘பெண்களுக்கெல்லாம் நாயகமாய் - தலைமையாக இருப்பவளே என்னும் பொருளில் நாயகப் பெண்பிள்ளாய்” என்று விளிக்கின்றாள். பேய்ப்பெண்ணே என்று கூப்பிட்ட வள் நாயகப் பெண்பிள்ளாய் என்று இப்பொழுது அழைக்கின்றாள். நாராயணமூர்த்தியை, கேசவனை எல்லாரும் பாடித் துதி செய்கிறார்கள். இந்தத் துதியின் ஒலியும் கேட்டும் நீ வாளா கிடக்கின்றாயே என்று பேசுகிறாள். மீண்டும் அவளிடமிருந்து மறுமொழி ஏதுமில்லை. எனவே, ஒளிமிக உடையவளே எனும் பொருளில் தேசமுடையாய் என்று குறிப்பிட்டு, கதவைத் திறப்பாயாக என்னும் பொருளில் திறவேலோர் எம்பாவாய்’ என்று முடிக்கின்றாள்.

இந்தத் திருப்பாசுரத்தில் கீச்சாங் குருவியின் கீச்சுக்கீச்சு ஒலி, ஆய்ச்சியர் தயிர் கடையும் ஒசை, கேசவனைப் பக்திப் பரவசத்துடன் பாடும் ஒலி ஆகிய மூன்று ஒலிகளைக் கேட்டும் உள்ளிருந்தே உறங்குகின்றாயே, கதவைத் திறந்து எழுந்து வா என்னும் கருத்துப் புலப்படுகின்றது.

கீசுகி சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின. பேச்சரவம் கேட்டிலையோ

பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால் ஒசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவ்ாய். (7)