பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. கீழ்வானம்


கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள
பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்
காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

ஆய்ச்சியர் பெண்கள் உறங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணை எழுப்புவதற்கு, அவள் வீட்டு வாசலில் கூட்டமாய் வந்து நிற்கிறார்கள். “எங்களுக்கெல்லாம் பொழுது விடிந்து விட்டதே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?” என்று கேட்கிறார்கள். உள்ளிருப்பவள் எழுந்திருக்காததற்குக் காரணம் அவளுக்குப் பொழுது விடிந்தது புலப்படவில்லையோ என்ற ஒர் ஐயப்பாட்டைத் தங்களுக்குள்ளேயே எழுப்பிக் கொள்கிறார்கள். கதிரவன் தோன்றும் கீழ்த்திசை வெள்ளென்று வெளுத்து ஆகாயத்திலே அதன் வண்ணம் பரவுகின்றதே! என்று ஒருத்தி பேசுகின்றாள். உள்ளே இருப்பவளிடம் இருந்து மறுமொழி ஏதும் வரவில்லை. அதற்குள்ளே பொழுது விடிந்து விட்டிருக்குமா என்று உள்ளே இருப்பவள் மயக்கத்தோடு எண்ணுகின்றாள். எனவே, வெளியே இருப்பவள் வேறோர் அடையாளத்தைச் சொல்ல முற்படுகின்றாள். சிற்றுார்களில் அதிகாலை நேரத்தில் இன்றைக்கும் காணக்கூடிய ஒரு காட்சியை உள்ளிருப்பவளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறாள். எருமைகள்