பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JG - திருப்பாவை விளக்கம்

கண்ணன்மாட்டுப்பேரன்பு கொண்டவள் இப்பெண். எனவே, எங்களுடைய சொல்லை ஏற்று, பறை கொண்டு செல்ல வேண்டும். நோன்பு நோற்பதற்குப் ப்றை வேண்டும். பறையினைக் கண்ணனைப் பாடிப் பெற வேண்டும். முதல் பாட்டிலேயே நாராயணனே நமக்கே பறை தருவ்ான்’ என்று சொன்னவர்கள் அன்றோ இவர்கள்! அடுத்து, கண்ணனுடைய வீர தீரச் செயல்கள்ை விளக்க முற்படு கிறார்கள். குதிரை வடிவமாக வந்த அசுரனை வாயைப் பிளந்து கொன்றான் கண்ணன். கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களையும் நூற்றுவர் தலைவன் துரியோதனன் நிலவறையில் வைத்திருந்த மல்லர்களையும் தன் வீர் தீரப் பராக்கிரமத்தால் வென்ற செய்தி நானிலம் நன்கு அறிந்ததே. அப்படிப்பட்ட தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்குகின்ற அக் கண்ணனைச் சென்று, அவனடியினைச் சேவித்தால் நற்பயன் பெறலாம். நாங்கள் கூறுகின்ற இக் கருத்தினை அ ஆ என்று ஆய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற்ாள். கண்ன்னுடைய அருளுக்குப் பெரிதும் பாத்திரமான_விட்டினுள்ளே பொய்யுறங்கும் இம் மங்கையை எழுப்பிக் கொண்டு அவளோடு கண்ணனிட்ம் சென்றால் கண்ணனுடைய அருள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் கண்ண பக்தியில் ஆழங்காற் பட்டிருக்கும் ஒரு பெண்ணை எழுப்பும் முகமாக அமைந்தது இத் திருப்பாசுரம் எனலாம்.

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவிடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள

பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்

காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிறந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)