பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தூமணி மாடத்து

துமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

து.ாபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பிரோ? உன்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

கண்ணனுடைய நினைவுடன் படுக்கையில் உறங்கியும் உறங்காமலும் இரண்டாட்டமாக இருக்கும் ஒரு பெண்ணைக் கூட்டமாக வந்த ஆய்ச்சியர்களில் ஒருத்தி எழுப்பும் போக்கில் இப்பாசுரம் அமைந்துள்ளது. சென்ற பாசுரங்களில் சினந்தும் நயந்தும் வீட்டின் உள்ளிருந்து உறங்குபவளை எழுப்பும் முயற்சி இந்தப் பாசுரத்திலும் தொடர்கிறது. குற்றமில்லாத ரத்தினங்களை இழைத்துச் செய்த மாளிகையில் அமைந்துள்ள அறையில் கண் வளர்கிறாள் கண்ணன் அடிமைத்திறம் உணர்ந்த பெண்.

அம் மணிமாடத்தில் அமைந்துள்ள படுக்கையறையில், படுக்கையைச் சுற்றி நாற்புறமும் ஒளிவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அகில் முதலான நறுமணப் பொருட்களின் புகை கமகமவென்று மணந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இனிய சூழலில் மென்மையான மெத்தையில் கண்வளர்ந்து கொண்டிருக் கிறாள் ஒரு பெண். ‘மாமன் மகளே என்று இதுவரையிலும் உறவு கொண்டாடி மகிழும் பெண்கள் இன்று மாமான் மகளே என்று விளிக்கிறார்கள். அவளுடைய செல்வச் செழிப்பை அறிந்தவர்கள் ஆன காரணத்ததால் ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று வேண்டிக்