பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருப்பாவை விளக்கம்

கொள்கிறார்கள். அவர்களினுடைய வேண்டுதலே அவள் மீது வெளியில் உள்ளவர்கள் கொண்டுள்ள மதிப்பைப் புலப்படுத்தும். அவளுடைய செல்வச் செழிப்பான வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுபவர்கள் தேர்ந்தெடுத்த சொற்களால் சுட்டிக் காட்டுகிறார்கள்.

துரமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

துரபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாeர்! அவளை எழுப்பிரோ?

இவ்வளவு சொல்லியும் அந்தப் பொய்யுறங்கும் மடந்தை, ‘கண்ணன் வருகிறபோது வந்துவிட்டுப் போகட்டும்’ என்று அமைதியோடு இருக்கிறாளாம். வெளியில் இருப்பவர்களே பனியில் நனைந்து குளிரில் நடுங்கி, கதவைத் திற கதவைத் திற’ என்று கூறிக் கொண்டே இருக்கிறார்கள். உள்ளிருப்பவளோ ஒரு சொர்க்க போகமான சூழ்நிலையில் நறுமணம் கமழும் அறையில் மெத்தென்ற பஞ்சணை மேல் பள்ளி கொண்டு உறங்கியும் உறங்காமலும் இருக்கின்றாள். இந்த நேரத்தில் உள்ளே இருக்கும் பெண்ணின் தாயிடம் வெளியே இருப்பவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். சாளரத்தின் வழியே வெளியே வந்து விழும் அறையின் வெளிச்சம் பெண்ணின் தாயின் முகத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. உள்ளிருக்கும் பெண்ணை அழைத்து அழைத்துச் சலித்துப்போன பெண்களுக்கு இந்தத் தாயின் முகம் ஒரு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.

‘மாமீர்! அவளை எழுப்பீரோ” என்று அந்தத் தாயோடு மாமி முறை கொண்டாடி அவளை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். உண்மையிலேயே மாமி சற்று மனமிரங்கி இருக்க வேண்டும்.