பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 39

வெளியே நிற்பவர்கள் படுகிற துன்பத்தை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் மாமியின் முயற்சியும் பலிக்கவில்லை. எனவே அடுத்த கட்ட முயற்சிக்கு ஆயத்தமாகிறார்கள் வெளியில் இருக்கும் பெண்கள். உள்ளிருக்கும் தாயைப் பார்த்து ‘உன்மகள் தான் ஊமையோ, இல்லையேல் செவிடோ, இல்லையேல் உறக்கமோ என்று கோபத்தோடு கேட்கிறார்கள். இதுவரை பொறுமையோடு பேசியவர்கள் பொறுமையை இழக்கிறார்கள். எழுந்திருக்க முடியாதபடி பெருந்துயில் இவளைக் காவல் காக்க அந்தத் துயிலில் சிக்கிக் கொண்டாளோ? பெருந்துயில் ஒரு மந்திரத்தால் இவளைக் கட்டுப்படுத்தி விட்டதோ என்று ஐயப்பட்டுக் கேட்கிறார்கள். இப்படி இவள் ஒரேடியடியாக உறங்குவதற்கு மந்திரம் போட்டவர்கள் யார் என்று வியக்கிறார்கள். ஏனென்றால் வெளியில் இருக்கிறவர்கள் விளித்த போதும் அருகில் இருக்கிற தாய் அழைத்த போதும் எழவில்லை என்றால் யாரோ ஒருவர் மந்திரம் போட்டுத் தூக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழாமல் காவல் காத்துக் கொண்டிருக்க வேண்டும். வெளியிலே பெண்கள் பகவந் நாமத்தைப் பயிற்றத் தொடங்கி விட்டார்கள். ‘மாமாயன்’ என்கிறார்கள். ‘மாதவன்’ என்கிறார்கள். வைகுந்தன்’ என்கிறார்கள். மந்திரத்திற்கு எதிர்மந்திரமாகக் கண்ணனின் கணக்கற்ற திருநாமங்கள் அமைகின்றன. மேலும்,

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல அவள் துாங்கவும், அந்த மந்திரத்தை முள்ளை முள்ளால் எடுப்பது போலத்