பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() திருப்பாவை விளக்கம்

திருமாலின் திருப்பெயர்களை மந்திர உச்சாடனமாக ஒதி அவளைத் துயில் எழுப்பும் தோழியர் திறமும் இந்தப் பாசுரத்தில் காணலாம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பரும் அசோகவனம் சென்று சீதையோடு பேச முற்படுமுன் அங்குச் சிறையிருந்த செல்விக்குக் காவலாக இருந்த அரக்கிகளெல்லாம் உறங்கும் வகையில் ஒரு மந்திரத்தை உச்சரித்துத் தன் செயலில் வெற்றி கொண்டான் எனக் குறிப்பிடுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.

து.ாமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

துாபம் கமழத் துயிலனைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9).