பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டொருநாள் கூற்றத்தின் வாய்விழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

தந்தானோ? ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

மேலைத் திருப்பாசுரத்துள் கிருஷ்ண பக்தியில் திளைத்து ஆனந்தப் பரவசம் கொண்டு சொர்க்கத்தைக் கற்பனையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பாங்கினைக் கண்டோம். வெளியில் இருப்பவர்கள் இவள் மட்டும் தன்னந்தனியாகக் கிருஷ்ண பக்தியில் மூழ்கித் தன்னலம் பாராட்டுவது தகாது. அவளை எழுப்பித் தங்களோடு சேர்த்துக் கொண்டு கிருஷ்ணானு பவத்தைப் பெற வேண்டும் என்று கருதுகிறார்கள். நீ கொடுத்து வைத்தவள் தவம் செய்தவள். அத்தவத்தின் பயனாகக் கண்ணன்மாட்டுப் பக்திக் காதல் கொண்டு நினைப்பளவில் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டிருப் பது எங்களுக்கு நன்கு தெரியும். நீ இப்படிக் கண்ணனை எண்ணி எண்ணித் தனியே மயங்கியும் தேறியும் இருப்பது சரியா? சற்று வெளியே வா, எங்களோடு கலந்து கொள்; எங்களுக்குத் தலைமை தாங்கி நடத்து; உன்னுடைய பக்திச் செல்வத்தை எங்களுடன் பாங்காகப் பகிர்ந்து கொள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.