பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 43

இறுதியில், உள்ளிருக்கும் மடந்தையைப் புகழ் கிறார்கள்.

ஆற்ற அனந்த லுடையாய்

அருங்கலமே! என்று விளித்து, உறக்கம் தெளிந்து மயக்கம் நீங்கி, சோம்பல் முடித்துக் கதவை வந்து திற என்று கேட்கும் போக்கில்

தேற்றமாய் வந்து திறவேலோர்

எம்பாவாய்!’

என்று முடிக்கிறார்கள்.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டொருநாள் கூற்றத்தின் வாய்விழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

தந்தானோ? ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!’

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். (10)