பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம்

பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

இத்திருப்பாசுரத்தில் ஆயர்களின் பண்புநலன்கள் பரக்கப் பேசப்படுகின்றன. கன்றுகளுடன் கூடிய பசு மந்தைகளை வைத்துப் பால் கறக்கத் தெரிந்திருக்கிறார்கள் ஆயர்கள். இவர்களுக்குப் பசுக்களிடமிருந்து பால் கறக்க மட்டுமே தெரியும் என்று எண்ணவேண்டா. இவ் ஆயர் களுக்குப் பகைவருடன் போரிடவும் தெரியும். இவர்கள் வாழ்வில் குற்றம் ஏதும் அறியாதவர்கள், செய்யாதவர்கள். இவ்வாறு குற்றமே செய்யாத குணவியல்புகள் கொண்ட இவர்களுக்கும் வாழ்க்கையில் பகைவர்கள் உண்டோ என்றால் உண்டு என்றபடி, கண்ணன் கழலினைக் கருதாத வர்கள் எவர்களோ அவர்கள் எல்லாம் இவ் ஆயர்களுக்குப் பகைவர்களே ஆவர். கண்ணன்மாட்டுக் கோவலர்கள் கொண்டு செலுத்தும் அளவற்ற ஆராத அன்பினை இதன்வழி அறியலாம். ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஒர் கொடும்பாடில்லை என்று சிலம்பும் செப்பிடுவதைக் காணலாம். இத்தகு தன்மை வாய்ந்த கோவலர்களுக்குப் பொற்றொடியாக வந்து வாய்த்தவளே என்று விளிக்கும் முகத்தான் பதினோராவது திருப்பாசுரம் தொடங்குகிறது.