பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 4.5

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம்

பொற்கொடியே!

கொடியே என்று ஆயர் குலப்பெண்கள் விளிக்கப் பெற்றிருப்பது ஒர் ஆழ்ந்த உட்பொருளைக் கொண்டுள்ளது. கொடி படர்வதற்குக் கொழு கொம்பை நோக்கிச் செல்வது போல, கோவலர் குலத்துதித்த இப்பெண்ணும் கண்ணனை நோக்கிப் படர வேண்டும் என்பது குறிப்பாகும். ஜனக குலத்தைத் தழைப்பிக்க வந்தவள் ஜானகி ஆதல் போல, கோவலர் குலத்தைத் தழைப்பிக்க வந்தவள் இப்பொற்கொடி என்பது பெற்றாம்.

பொற்கொடியே என்று அழைத்தவர்கள் அடுத்துப் புனமயிலே என்கிறார்கள். காட்டிலே ஆடிக்களித்து வருவது மயில், மேகத்தைக் கண்டால் மகிழ்ச்சி மீதுாறிக் களிகொண்டு தன் தோகையை அழகுபட விரித்து ஆடும் தன்மை வாய்ந்த பறவை மயிலாகும். காட்டிலே மரம் நோக்கிப் படரும் கொடி, பாட்டிலே மனம் களிக்க ஆடும் மயில் இரண்டும் காட்டிலே முல்லை நிலத்திலே ஆயர்ப்பாடியிலே வாழும் இடைக்குல நங்கைக்கு உவமித்துக் கூறப்பட்டன. இத்தகைய அழகிய பண்புநலன்கள் வாய்ந்த நங்கையே! நீ எழுந்து வருவாயாக! என்று அழைக்கிறார்கள்.

உறவினர்களும் தோழிமார்களும் மற்றும் எல்லாரும் உன் வீட்டு முற்றத்தில் கூடியிருக்கிறார்கள். எதற்காக எல்லோரும் கூடியிருக்கிறார்கள் என்றால் மேகம் போல் கரிய நிறமும், மேகம் பொழியும் மழை போலக் கொடைக் குனமும் கொண்ட எம் பெருமானின் திருநாம மகிமை களைச் சொல்லிச் சொல்லி மகிழக் கூடியிருக்கிறார்கள்.

பெண்மை என்னும் பெரும் செல்வத்தினைத் தனி நாயகமாக நின்று ஆண்டு கொண்டிருக்கும் பெண்ணே நீ