பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருப்பாவை விளக்கம்

உடம்பை அசைக்காமலும் பேசாமலும் இருக்கிறாயே, உறங்கிக் கொண்டே இருக்கிறாயே! அது எதற்காக என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா! எந்தப் பயன் கருதி நீ உறங்குகின்றாய்? உறங்குகின்ற இச்செயல் யார் உகக்கும் செயலென்று கருதி உறங்குகின்றாய்? என்று கேட்குமுகத் தான் நீ உறங்காதே. நீ உறங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை, எனவே நீ எழுந்து வா! என் கண்ணின் பாவை போன்றவளே எழுந்துவா! என்று அழைக்கின்றனர்.

“யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் தாயுமான தயாபரர். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்ப துவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே பெண்கள் மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்றுப் பரந்தாமனின் பாத கமலங்களைப் பாடிப் பரவித் தங்கள் பாதக மலங்களைப் போக்கிக் கொள்ள எல்லோரையும் அழைக்கிறார்கள் என்பது இப்பாசுரத்தின் வழிப் பெறப்பட்ட கருத்தாகும்.

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம்

பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ

ரெம்பாவாய். (11)