பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கனைத்து இளங்கற்றெருமை

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்

செற்ற மனததுக் கினியானைப் பாடவும்.நீவாய்

திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ

ரெம்பாவாய்.

இதுவரையில் ஆயர்குல நங்கையைப் பற்றியே கூறிக்கொண்டு வந்த ஆய்ப்பாடிச் சிறுமியர்கள், இப்போது கண்ணனைப் பற்றிப் பேச முற்படுகிறார்கள்.

செல்வங்கள் பலவாயினும் பழங்காலத்தில் செல்வம் என்பது பசுக்களையே குறித்தது. மாடு என்று சொல்லிற்குச் ‘செல்வம்’ என்பது பொருளாகும். மாடல்ல மற்றையவை என்ற திருவள்ளுவரின் திருக்குறள் தொடரையும் நோக்குக. பசுக்களே அன்று செல்வமாக மதிக்கப் பெற்றதனால், பசு மந்தைகளைக் களத்திலே கவர்வது போரின் தொடக்கமாயிற்று. மாற்று வேந்தன் பற்றிச் சென்ற பசுக்களை மீட்டு வருவதே போரின் அடுத்த நிலையாயிற்று. முன்னது ‘வெட்சி’ என்றும், பின்னது கரந்தை’ என்றும் தொல்காப்பியம் கூறிற்று. கொடுங்கோல் மன்னன் ஆட்சி நடத்தும் நாட்டில் பசுக்கள் பால்தரா என்றனர். ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் என்றார் திருவள்ளுவர்.