பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருப்பாவை விளக்கம்

இவ் ஆயர்பாடியிலே வாழும் நங்கையின் தமையன் இளங்கன்றுகளையுடைய எருமைகள் பலவற்றின் சொந்தக்காரன் ஆனபடியால் அவன் நற்செல்வனாக பெரும் பணக்காரனாய் விளங்குகிறான். இந்த நல்ல செல்வரின் வீட்டு வாசல் எப்படிப்பட்டது தெரியுமா?

பாலைக் காம்பு பற்றி ஆயர்கள் கறக்காத காரணத்தினாலே இளங்கன்றுகளுடைய எருமைகள் கண்ணனை நினைத்துக் கத்திக் கொண்டு கட்டுத்தறியில் இங்கும் அங்கும் அலைபாய்வதனாலே பால் சுரக்கின்றன. அதனால் ஆயனின் இல்லம் பால் கலந்து சேறாகின்றது. இந்தப் பழமையான பால்வளக் காட்சியை நாச்சியார் நம் கண்முன் கொண்டு வரும் திறம்தான் என்னே!

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

இத்தகு வளம் நிறைந்த செல்வச் செழிப்பு மிக்க வாசலில் நாங்கள் வந்து நிற்கிறோம். பனி எங்கள் தலைமீது விழுகின்றது. இருந்தும் உன்னை எங்களோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டும் உன் வாயிற்படியில் வந்து நிற்கிறோம். எங்கள் கால்களின் கீழே பாற்சோற்று வெள்ளம்; தலைகளின் மேலே பனி விழுகின்ற குளிர்ச்சித் தண்ணிர் வெள்ளம், தலைக்கும் காலிற்கும் இடையே இருக்கும் எங்கள் உள்ளத்திலோ ஒரே உணர்ச்சிப் பிரவாகம். கிருஷ்ணபக்தியில் ஈடுபட்ட பெருவெள்ளம். இம்மூவாறாக வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப் பட்டிருக்கிறோம். இந்த நிலையிலும் சீதையைக் கவர்ந்து சென்ற இலங்கை வேந்தனாகிய இராவணன் மீது கோபம்கொண்டு அவனை முற்றிலுமாக அழித்த-மனத்திற்கு இனியவனாக இருக்கின்ற இராமனை நாங்கள் மகிழ்ந்து