பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 40

அவர் வெற்றியைப் பாடப் போகிறோம். எனவே இப்போதா வது வாய்திறக்க வேண்டும் என்கிறார்கள்.

“தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்’ என்பது குலசேகரப் பெருமாள் வாக்கு.

துஷ்டப்பிள்ளையாகிய கிருஷ்ணனைப் பாடிப் பின் சாதுப் பிள்ளையாகிய இராமனைப் பாடிய பின்னரும் கூடவா இன்னும் உறக்கம்? அது பேருறக்கம் என்று கேட்கிறார்கள். ‘எல்லா வீட்டினரும் துயிலுணர்ந்து எழுந்த பின்னரும் நீ உறங்கலாமா? எனவே பெண்ணே நீ எழுவாயாக’ என்று எழுப்புகிறார்கள்.

இப்பாசுரத்தில் பால் வெள்ளம், பனிவெள்ளம், பக்தி வெள்ளம் ஆகிய மூன்று வெள்ளங்களும் ஒரு சேரக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்

செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய்

- திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ

ரெம்பாவாய். (12)