பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. புள்ளின்வாய் கிண்டானை

புள்ளின்வாய் கிண்டானைப் பொல்லா

அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்

போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

ஆறாவது பாசுரம் புள்ளும் சிலம்பினகாண் என்று. தொடங்கியது. இப்பாசுரத்தின் இடையே அதே தொடர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. தாமரைப் பூவின் மலர்ச்சியினையும் மானின் மருட்சியினையும் கொண்ட அழகிய கண்களையுடையவளே என்னும் பொருளில் திருவாய்ப்பாடிப் பெண்கள். போதரிக் கண்ணினாய் என உள்ளே . உறங்கிக் கொண்டிருப்பளை விளிக்கிறார்கள். வழக்கம்போலத் தாங்கள் பாடிப்பறை கொள்ளவேண்டிய அனுக்கிரகத்தைச் செய்யக்கூடிய கண்ணனுடைய அவதார மகிமைகளையும், உடன் இராமாவதாரத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுகிறார்கள்.

பறவையின் வடிவத்தில் வந்தான் ஒர் அசுரன். அவனுடைய நோக்கம் தன் சிறகால் கண்ணனை அழிப்பதாகும். காக்கும் கடவுளையே அழிக்கப் புகுந்தவன் உருப்படுவானா? அவன் எண்ணம் ஈடேறுமா? நோக்கம் தீயதானால் தீயதுதான் விளையும். அவ்வாறே விளைந்தது. பறவை வடிவாக வந்த அசுரனின் வாயைப் பிளந்து அவன் வாழ்க்கையை முடித்தான் கண்ணன். இதுபோன்றே தான்