பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.52 திருப்பாவை விளக்கம்

மேலும் கிருஷ்ணனின் திருப்பெயரினை உச்சரித்துக் கொண்டே சென்று நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப் பட்டுள்ள இடத்தை-பாவைக் களத்தைத் திருவாய்ப்பாடிப் பெண்கள் அடைந்துவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் பாவை நோன்பு நோற்கும் இடம் சென்று சேர்ந்துவிடவும், நீ அவர்களோடு சேர்ந்து கொள்ளாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பது அழகன்று. உடம்பு மிகக் குளிர்ந்து நீர் நிலையில் படிந்து படிந்து குடைந்து குடைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பாயோ! இன்று நல்ல நாள்; எனவே நீ உன் கள்ளத்தைக் கைவிட்டு எங்களோடு கலந்து பாவை நோன்பு மேற்கொள்ள வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ

என்னும் அடிகளில் ஆண்டாள் நீராட்டு நிகழ்ச்சியை அனுபவித்துப் பாடியுள்ளார் எனலாம்.

புள்ளின்வாய் கிண்டானைப் பொல்லா

அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்

போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ

ரெம்பாவாய். (13)