பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய்

கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்

o தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நானாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ

ரெம்பாவிாய்.

நம் மனக்கண் முன் காட்சித் திரைகளை விரிக்கின்ற அருமையான பாசுரம் பதின்மூன்றாவது பாசுரமாகும். ஆண்டாளின் அதியற்புதமான கற்பனை, இயற்கை வருணனையாக இப் பாசுரம் கருக்கொண்டுள்ளது. கற்பனைச் சிறகு கட்டிப் பறந்து கிருஷ்ணாவதார காலத்துத் திருவாய்ப்பாடிக்கே சென்று விடுகிறார் கோதை நாச்சியார்.

நான் எல்லோருக்குமுன் படுக்கையை விட்டெழுந்து வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்’ என்று உறுதியாகக் கூறியவள் இன்று இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றாள். அவள் கூறிய சொற்கள் குறைபட்டுப் போய்விட்டன. ஏனெனில் பிறரை எழுப்ப மறந்து விட்டதும் அல்லாமல் தன்னையே தான் எழுப்பிக் கொள்ளாமல் இன்னும் அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாளே!

உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவள் வீட்டு வாசலில், அவள் தோழிகளெல்லாம் வந்து கூடிவிட்டார்கள். அவளை எழுப்ப முனைபவர்கள் பொழுது புலர்ந்து விட்டதனைப் பல்வேறு சாட்சியங்கள் காட்டித் தெளிவுபடுத்துகிறார்கள்.