பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருப்பாவை விளக்கம்

என்னுடைய வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் தோட்டத்தின் கிணற்றில் செங்கழுநீர்ப் பூக்கள் பூத்து, ஆம்பலாம் குமுத மலர்கள் வாய்மூடிக் கொண்டன என்கிறார்கள்.

உங்கள் புழக்கடைத் தோட்டது வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய்

கூம்பின காண்.

காலைக் காட்சியின் மாட்சி இவ்வடிகளில் தெளிவுறப் புலனாகிறது. சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சிறந்த இடங்களில் சிறந்த முறையில் அடுக்கும் ஆண்டாளின் கவிதை மாட்சியும் கவினுற விளக்கமுறுகின்றது. செங்கழுநீர்பூக்க, மலர என்றெல்லாம் சொல்லாமல் வாய் நெகிழ்ந்து’ என்ற சொல்லைப் பெய்துள்ள திறத்தினை ஆங்கிலத்தில் டிக்ஷன் என்பார்கள். தமிழில் சொல்லாட்சிச் சிறப்பு என இதனைச் சுட்டலாம். ஆம்பல் மலர்கள் வாய் கூம்பின என்று குறிப்பிடுவதும் சொல்லாட்சி ச் சிறப்பின்பாற்பட்டதாகும். மூடிக் கொண்டன என்று சொல்லாமல் கூம்பினகாண்’ என்று குறிப்பிட்டிருப்பது தேர்ந்த கவியின் திறப்பாடு எனலாம்.

செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்ததும், குவளை மலர்கள் கூம்பினதும் காலை நேரக் கவின்மிகு காட்சிகள் அன்றோ! தாமரை கதிரவனின் வரவு கண்டு பூரிப்பதும், குவளை சந்திரனின் வரவு கண்டு நெகிழ்வதும் இயற்கை. காலை நேரமானதால் முன்னிரவில் மலர்ந்து இருந்த குவளை கதிரவன் தோன்றுகின்ற பொழுது வாய்குவித்துக் கொள்கிறான். இதனாலேயே தாமரையின் காதலன் கதிரவன் என்றும், அல்லியின் காதலன் சந்திரன் என்றும் குறிப்பிடுவர்.

இப்பொழுது வீட்டிற்கு வெளியில் வந்து நின்று கொண்டு உள்ளிருப்பவளை எழுப்பும் பெண்கள் பிறிதொரு காட்சியினைத் தெரியப்படுத்துகிறார்கள்.