பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 5.5

செங்கல் நிறத்திலிருக்கும் காவியாடையினை அணிந்துகொண்டு வெள்ளிய பற்களையுடைய துறவிகள் தங்கள் திருக்கோயிலில் சங்குகளை ஊதி முழக்கும் பொருட்டுப் போகிறார்களே இஃது இரண்டாவது காட்சி என்கிறார்கள்.

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்

போகின்றார்.

செங்கழுநீர் வாய் நெகிழ்தலும், ஆம்பல் வாய் கூம்புதலும் ஒரே அடியில் அமைந்துள்ள முரண் தொடையாகும். இவ்வடிகளிலும் செங்கல் பொடிக்கூறை என்றும் வெண்பல் தவத்தவர் என்றும் ஒரே அடியில் இடம் பெற்றிருப்பது முரண்தொடை நயமாகும்.

‘எங்களை முன்னம் எழுப்புவதாகச் சொல்லிய பெண்ணே! எழுந்திருப்பாயாக! நாணப்படாத நாவினை யுடையவளே! எழுந்திருப்பாயாக! ஒரு கையில் சங்கும் பிறிதொரு கையில் சக்கராயுதமும் கொண்ட விசாலமான கைகளை யுடையவனாகிய தாமரைக் கண்ணனைப் பாடுவாயாக!’ என்று கூறி அவளை எழுப்புகின்றனர்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய்

கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்

தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நானாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ

ரெம்பாவாய். (14)