பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. எல்லே! இளங்கிளியே!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின்! நங்கைமீர்!

போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்

தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோ

ரெம்பாவாய்.

பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய் ான்று பாடியும் உள்ளே உறங்குகின்றவள் எழாமையினால் அவளை முகத்துதி செய்து, குளிர்ந்த வார்த்தைகளைக் கூறிக் குளிர்வித்து எழுப்ப நினைக்கிறார்கள். ’ப்படிக்கூறியும் அவள் எழும்பவில்லையாகையால் ‘ப்படியாவது அவளை எழுப்ப வேண்டுமென்று |ணிகிறார்கள்.

‘எல்லே! இளங்கிளியே! என அழைக்கின்றனர். ால்லே! என்பது என்னே! என்றும் ஆச்சரியம் என்றும் லப்படுத்தும் வியப்புப் பொருளில் வந்த சொல்லாகும். |ளங்கிளியே! என்று இவள் அழைக்கப்படுவதற்குக் ாரணம் இவள் கிளி போலப் பேசி மகிழ்விக்கும் னிமையின் பொருட்டேயாம். இவள் தன் தோழியரோடு ளி போலக் கொஞ்சி விளையாடுவது வழக்கம் என்று தரிகிறது. இளங்கிளியே! என்று விளித்தவர்கள் இன்னுமா 9ங்குகின்றாாய்! என்று வியப் போடு அடுத்துக் ட்கின்றார்கள். இருவருக்கும் இடையே நடைபெறும் ரையாடற் போக்கில் இப் பாசுரம் அமைந்துள்ளது.