பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 57

வீட்டிற்கு வெளியே வாசலில் காத்திருப்பவர்கள் எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ! என்று கேட்கவும் உள்ளே உறக்கத்தில் இருப்பவளாகக் கருதப்படுபவள் சிலுசிலுவென்று என்னைக் கூப்பிடாதீர்கள்! என்னும் பொருளில் சில்லென்று அழையேன்மின்’ என்கிறாள். மேலும் அவள் பேசுகின்றாள் ‘என் தோழியராகிய நங்கைமார்களே! இதோ புறப்பட்டு வருகின்றேன்” என்கின்றாள். ஆனால் வெளியிருப்பவர் களுக்கோ வெகுளி பிறந்து விடுகின்றது. “ஏற்கெனவே நாங்கள் உன் இட்டுக் கட்டிச் சொல்லும் பேச்சுத்திறனை மெச்சியிருக்கிறோம். இப்போதும் மெச்சுகிறோம்” என்று சொல்கிறார்கள்.

வல்லை உன் கட்டுரைகள்

பாங்குற உன் வாய் அறிதும்.

உள்ளேயிருப்பவள் விட்டுக் கொடுத்தாளோ? இல்லையே! அவளும் எதிர்ப்பேச்சு பேசுகிறாள். “நானே உங்கள் கூற்றுப்படி சாமர்த்தியசாலியாக இருந்து விட்டுப் போகிறேன். அதற்கென்ன இப்பொழுது’ என்று உரையாடலைத் தொடர்கின்றாள்.

“வல்லிர்கள் நீங்களே!

நானேதான் ஆயிடுக!”

பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளிருப்பவளுக்கு வாய்த்துவிட்டது. இத்தகைய பண்பு ரீவைஷ்ணவ லட்சணம் என்று சொல்லப்படும்.

இவ்வாறு உள்ளிருப்பவள் தணிந்து அமைதியாக மறுமொழி உரைத்ததும், வெளியில் இருப்பவர்களும் அமைதியடைந்து பேசத் தொடங்குகிறார்கள்.

“விரைவாகப் பெண்ணே நீ எழுந்து வா, உனக்கெனத் தனியாக என்ன வேறுபாடு இருக்கிறது” என்கிறார்கள்.