பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

கூட்டிக் கொண்டு நீர்நிலைக்குச் சென்று நீராடிப் பாவை நோன்பு நோற்பது தொன்று தொட்டுத் தொடர்ந்து இருந்து வரும் வழக்கமாகும். சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ என்று இது குறிப்பிடப்படுகிறது. நல்ல கணவனை அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பாவை நோன்பு மேற்கொள்ளப்பட்டது. பார்க்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி’, நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல் வைகறையில் நீராடி கண்ணுக்கு மை எழுதாமல், கூந்தலுக்கு மலரிட்டு முடியாமல், செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல், பிறரைக் கோள் சொல்லாமல், வாழ்வது மார்கழி நோன்பின்பால் அடங்கும்.

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, செந்நெல் செழித்து வளர, வண்டுகள் இசை பாட,'பசுக்கள் குடம் குடமாகப் பால் சுரக்க எங்கும் செல்வ வளம் பெருக வேண்டுமென்று கண்ணனை வேண்டிக் கசிந்துருகி நிற்பதும் பாவை நோன்பின்பாற்படும்.

திருப்பாவை முப்பது பாடல்களையும், பாடினால் பாதகங்கள் திரும்; பரமனடி கூட்டும்; வேதத்தின் வித்தாக விளங்கும் கோதைத் . தமிழான முப்பது பாடல்களையும் அறியாத மானிடரை இந்த உலகம் சுமப்பது தகாது என்று ஆன்றார் அருளிச் செய்தனர். எனவே தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் இலக்கிய உலகின் இமயமாக விளங்கும் திருப்பாவைப் பாடல்களைக் கற்றுத் தேர்ந்து, பாடி மகிழ்ந்து பரவசப் படவேண்டும். இதன் வழி மாழ்கழி மாதம் பீடை மாதமாக இல்லாமல், பீடு மாதமாக - பெருமை சேர்க்கின்ற மாதமாக அமைய வேண்டும்.

சைவர்களுக்கு வாய்த்த திருவெம்பாவை, வைனர்களுக்கு வாய்த்த திருப்பாவை ஆகிய இரண்டும் கார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை, வான் உள்ள வரை, வளியுள்ளவரை, மண் உள்ள வரை, நெருப்புள்ள வரை, இவ்வுலகில் நின்று வாழும் நேர்த்தி மிக்க பாடல்களாகும், தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், இவ்விரு நூல்களின் பாடல்களைப் பாராயணமாகப் பாடி உய்ய வேண்டும் என்பதே என் நோக்கமாகும்.

- சி.பா.

“தமிழகம்” சென்னை - 600 029

22. 1 1.95