பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. திருப்பாவை விளக்கம்

நல்லை நீ போதாய்

உனக்கென்ன வேறுடையை?.

உள்ளிருந்து உரையாடலுக்கு உற்சாகம் பொங்கித் ததும்புகிறது. “எல்லோரும் வந்து விட்டார்களா?’ என்று கேட்கிறாள்.

‘எல்லாரும் போந்தாரோ வெளியிலிருப்பவர்கள் இப்பொழுது மறுமொழி கூறுகிறார்கள். “ஆம்! எல்லாரும் வந்து விட்டார்கள். நீ வேண்டுமானால் வெளியே வந்து எத்தனைபேர் என்று எண்ணிக் கொள்’ என்கிறார்கள்.

போந்தார் போந்து

எண்ணிக் கொள்.

இதன் பிறகு இவர்கள் கண்ணனின் வெற்றிச் செயல்களை வீறு பெறச் சொல்லத் தலைப்படுகிறார்கள். ‘குவலயாபீடம் என்றழைக்கப்பட்ட வலிய யானை கம்சனால் கண்ணனைக் கொல்ல ஏவப்பட்டதாகும். அந்த யானையை ஒழித்துக் கொன்றான் கண்ணன். மேலும் பகைவர்கள் எவர் வந்தபோதிலும் அவர்களை எதிர்கொண்டு அழிக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவன் கண்ணன். மாயம் பல நிகழ்த்தும் மாயன் அவன். எனவே அவனைப் பாடிப் பரவசப்படுவோம் என்று அகங்குழைந்து அன்பால் உருகி நிற்கிறார்கள் திருவாய்ப்பாடிப் பெண்கள்.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின்! நங்கைமீர்!

போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்

வல்லிர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்

தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலோ ரெம்பாவாய். (15)