பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும்

தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே

வாய்நேர்ந்தான் துரயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

ஆறாவது திருப்பாசுரம் தொடங்கிப் பதினைந்தாவது திருப்பாசுரம் வரையில் அமைந்துள்ள பத்துத் திருப்பாசுரங்கள் பள்ளி எழுச்சிப் பாடல்களாகத் தோழியர் உறங்கிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புவதைக் கண்டோம். திருவாய்ப்பாடியில் வைகறையில் பள்ளிவிட்டு எழாமல் துயின்று கொண்டிருந்த பெண்கள் எல்லோரையும் இப் பத்துப் பாசுரங்கள் துயில் எழுப்புவதை உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

இப்போது திருவாய்ப்பாடியிலுள்ள பெண்கள் அனைவரும் படுக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள். இனி நடக்க வேண்டுவது என்ன?

பதினாறாவது பாசுரம் தொடங்கி இருபத்திரண்டாம் பாசுரம் வரையில் அமைந்துள்ள ஏழு பாசுரங்களும் ஆயர்குலச் சிறுமியர்கள் தாங்கள் வந்தித்து வழிபடும் கண்ணபிரானை எழுப்ப விரும்பி எல்லோரும் கூடிச் செல்கிறார்கள் என்கின்றன.