பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் (). I

காக்கும் வாயில் சாதாரனவாயில் அன்று, அது கொடி கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் தோரணவாயில் என்கிறார்கள். அவனும் அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து உள்ளே விடுகிறான். மணிகள் கட்டிக் கோத்துத் துலங்கும் கதவான காரணத்தினால்

‘மணிக்கதவம் தாள்திறவாய்’

என்று வேண்டுகோள் விடுக்கின்றார்கள், அவன் கதவு திறந்தபாடாக இல்லை. எனவேதான் மேற்கொண்டு அவனோடு பேச்சுக் கொடுக்கிறார்கள்.

“ஆயர்குலப் பெண்களாகிய எங்களுக்குப் பாவை நோன்பு நோற்பதற்கு உறுதுணை பயக்கும் வாத்தியமாகிய பறையினை வழங்குவதாக மாயோனாகவும் மணிவண்ணனாகவும் விளங்குகிற கண்ணபிரான் நேற்றே வாக்களித்திருக்கிறான்’ என்கிறார்கள்.

வாய் நேர்ந்தான்’ என்னும் சொற்றொடரில் சொல்லாட்சிச் சிறப்பு அமைந்து துலங்குகின்றது.

“வள்ளியின் தேனுாறு கிளவிக்கு வாயூறி

நின்றவன் செங்கீரை ஆடி அருளே’ என்று முருகப் பெருமான் வள்ளியின் வாய்ச்சொற்களுக்கு ஏங்கி அங்காந்திருந்த நிலையினைப் பிள்ளைத் தமிழ் பேசும் சொல்லினைத் தேனில் குழைத்துரைப்பாள், சிறு வள்ளியைக் கண்டு சொக்கி மரமென நின்றனை தென் மலைக்காட்டிலே’ என்பார் மகாகவி பாரதி.

இது போன்றே கண்ணனும் ஆயர்குலப்பெண்டிரின் சொற்களில் மயங்கி முந்திய நாளே அவர்கள் வேண்டு கோளுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டானாம். இதனை