பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ 2 திருப்பாவை விளக்கம்

வாயிற் காப்போனிடம் எடுத்துச் சொல்கிறார்கள். நாங்கள் இப்பொழுது துயிலெழுந்து மார்கழி நீராடித் தூயவர்களாய் வந்துள்ளோம். அவன் துயிலெழுந்து வரவேண்டுமென்று திருப்பள்ளியெழுச்சிப் பாடப் போகிறோம். எனவே நீ முதன்முதல் உன் வாயால் மறுத்துப் பேசிடாமல் இருக்க வேண்டும். அதோடு கண்ணனோடு நேயங்கொண்டு நிற்கும் நிலைத்த கதவினையும் திறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும்

தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே

வாய்நேர்ந்தான் துரயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ

ரெம்பாவாய். (16)