பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அம்பரமே தண்ணிரே

அம்பரமே தண்ணிரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!

குலவிளக்கே! எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

கோயில் காப்போனின் இசைவினையும், வாயில் காப்போனின் இசைவினையும் ஒருங்கே பெற்று, நந்தகோபாலனின் திருமாளிகைக்குள் உள்நுழைந்த திருவாய்ப்பாடிப் பெண்கள், நந்தகோபாலனின் கொடைச் சிறப்பினை விளக்கமாகக் கூறி அத்தகைய வள்ளல் தங்களுடைய வேண்டுகோளினையும் மறுக்காமல் ஏற்றுத் தங்களுக்கு உதவிபுரிய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார்கள்.

முதலாவது, நந்த கோபாலனின் கொடைப் பண்பினைக் காண்போம். அவன் விண்ணுலகத்தி லுள்ளவர்க்கெல்லாம் வேந்தனாக விளங்குகின்றான். அத்தகைய வெற்றித்திறன் வாய்ந்த வேந்தன் தங்களுடைய வேண்டுகோளினை ஏற்று உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு எழவேண்டும் என்கிறார்கள். அவன் ஆடையின்றி நலிந்து வந்தவர்க்குத் தாராளமாக ஆடை

தருகின்றான். பசி என்று பரதவித்து வந்தவருக்கு ‘உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று சோற்றை உவந்து தருகின்றான். இவ்வாறு மானம் காப்பதற்கு

உறுதுணையாகும் உடையினையும், உயிர் நிலைப்பதற்கு