பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sy-s திருப்பாவை விளக்கம்

உதவிடும் தண்ணிரையும், சோற்றினையும் இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்னாது கூறித் தருமம் செய்கின்றான். இதனால் நந்தகோபாலனை ‘அறம் செய்யும் எம்பெருமான்’ என்று பாராட்டுகின்றனர்.

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்

அம்பரமே தண்ணிரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்!

அடுத்து, நந்தகோபாலனின் மனைவியும் கண்ணனின் வளர்ப்புத் தாயுமான யசோதயைத் துயிலெழுப்பு கின்றார்கள். யசோதை பெண்களுக்கெல்லாம் ஒரு குலக்கொழுந்தாக ஒளிர்கின்றாளாம். இங்கு யசோதை ‘கொழுந்து’ என அழைக்கப்பட்டது ஒர் ஆழந்த உட்பொருளை நோக்கியதாகும்.

‘அச்சுதா அமரர். ஏறே

ஆயர்தம் கொழுந்தே’

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கண்ணனைக் குறிப்பிட்டார். மரத்தின் வேரில் ஏதேனும் நோய் தோன்றின் அந்நோயின் வெளிப்பாடு அம்மரத்தின் கொழுந்தில் தெரியும். அதுபோலத் திருவாய்ப்பாடி மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றதா என்பதனை ஆய்ப்பாடியில் வளரும் கண்ணனை மட்டும் போய்க் கண்டுகொண்டால் தெரியவரும். கண்ணன் மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆய்ப்பாடியே ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைத்துள்ளது என்று பொருள். அவ்வாறே இங்கு யசோதைப் பிராட்டி கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே என்று குறிக்கப் பட்டிருப்பதன் நோக்கம், யசோதை ஆய்ப்பாடியில் மகிழ்ச்சியில் திளைத்துள்ளாள் என்றால் ஆய்ப்பாடியே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது என்று பொருள். மேலும்,