பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் (7.5

யசோதை தான் பிறந்த இடத்திற்குப் பெருமை சேர்ப்பவள். எனவே குலவிளக்கு என அவளைக் குறிப்பிடுகிறார்கள். விளக்கு ஒளி தந்து தன்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்குவது போல, இவளும் ஆயர்குலத்திற்கு விளக்காக இருந்து தன்னைச் சுற்றியுள்ளோர் துன்ப இருளைப் போக்குகிறாள் என்பது பொருள். அடுத்து, எம்பெருமாட்டி என்கின்றனர். எங்களுக்கெல்லாம் தலைவியாக இருக்கும் தகுதி பெற்றவளே என்பது இதற்குப் பொருள். யசோதாப் பிராட்டியே நீயும் துயிலிலிருந்து எழ வேண்டும் என்கிறார்கள்.

கொ ம்பனார்க்கு எல்லாம்

கொழுந்தே குலவிளக்கே!

எம்பெரு மாட்டி

யசோதாய்! அறிவுறாய்!

என்கிறார்கள்.

பிறகு, கண்ணனைத் துயில் உணர்த்தத் தலைப்படு கிறார்கள். உம்பர்கோ மானே’ என்கிறார்கள். ஏற்கெனவே நந்தகோபனையும் இவ்வாறே அழைத்தார்கள் என்பதையும் நோக்க வேண்டும். மைந்தனின் வெற்றி இங்குத் தந்தை மேலும் நின்றது எனக்கொள்க. விண் நாட்டவர் தேவனாக விளங்குகிறானாம் கண்னன். அவன் உறங்காமல் துயிலுணர்ந்து எழ வேண்டும் என்கிறார்கள்.

‘உம்பர்கோ மானே!

உறங்காது எழுந்திராய்!

என்கிறார்கள்.