பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுே திருப்பாவை விளக்கம்

அடுத்து, கண்ணனின் அண்ணன் பலதேவனை எழுப்புகிறார்கள். ‘செம்பொன் கொண்டு செய்த வீரக் கழல் அணிந்த அடியினையுடைய செல்வனே! பலதேவனே! உன் தம்பி கண்ணனும் நீயும் உறங்காதீர்கள் எழுந்து எங்களுக்கு அருளுங்கள்’ என வேண்டிக் கொள்கிறார்கள்.

செம்பொற் கழலடிச்

செல்வா! பலதேவா! உம்பியும் நீயும்

உறங்கேலோர் எம்பாவாய்!

என்பது அவர் தம் விண்ணப்பமாகும்.

அம்பரமே தண்ணிரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!

குலவிளக்கே! எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)