பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. உந்து மத களிற்றன்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி: கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ

ரெம்பாவாய்.

இப்பதினெட்டாவது பாசுரம் வைணவ சமயத்தை நிலைநிறுத்த வந்த ரீபெரும்புதூர் இராமனுசர் உவந்த திருப்பாசுரம் என்று வழங்கப்பெறும். திருப்பாவைப் பாசுரங்களில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு நாள்தோறும் அப்பாசுரங்களை ஒதுவதனையே மரபாகக் கொண்டிருந்த இராமானுசரை, திருப்பாவை ஜியர்’ என்று குறிப்பிடுவார்கள். ஒருமுறை பெரியநம்பியின் திருமாளிகையை நோக்கிச் சென்ற இராமானுசர் திருப்பாவைப் பாட்டைப் பாடிக் கொண்டு நின்றார். அப்பாட்டைக் கேட்டுப் பெரியநம்பியின் திருமகளான அந்துழாய் என்னும் பெண் உள்ளேயிருந்து வெளியே வந்து கதவைத் திறந்தார். அந்துழாயைக் கண்ட இராமானுசர் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்துவிட்டார். ‘உந்து மதகளிற்றன்’ என்னும் பாட்டின் விளைவே இராமானுசர் மூர்ச்சித்து விழக் காரணம் என்று பெரியநம்பி அறிந்து கொண்டார். இந்தப் பாடலில் இராமானுசரின் உள்ளங்கவர்ந்த காட்சிகள் நிரம்ப உண்டு எனத் தெளியலாம்.

இனி, பாசுரத்தைக் காண்போம். தொடக்கத்தில் நப்பின்னைப் பிராட்டியை ஆய்க்குலப் பெண்கள்