பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

öcm திருப்பாவை விளக்கம்

துயிலுணர்த்துகிறார்கள். நப்பின்னையைக் கொண்டே அவளுடைய நாயகனான கிருஷ்ணனைப் பற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே ‘நந்தகோபாலன் மருமகள் நப்பின்னை’ என்று கூறத் தொடங்குபவர்கள் நந்தகோபனின் வீரம் விளைவிக்கும் வெற்றித் தோள்களைப் பற்றிப் பாடுகிறார்கள். மதநீர் பெருகுகின்ற யானையைப் போலப் பலம் உள்ளவனும் போர்க்களத்தில் புறமுதுகிட்டுப் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமானவன் நந்தகோபாலன். அத்தகு வீரம் வாய்ந்த நந்தகோபாலனின் மருமகளே! என்று முதற்கண் உறவு முறையைச் சொல்லிப் பின்னர் நப்பின்னையே’ என்று அவர் பெயரைக் குறிப்பிட்டு, அதற்கு மேலும் நறுமணம் கமழுகின்ற கூந்தலை உடையவளே என்றும் முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்கள். இவ்வாறு புகழந்துரைத்து வாயிற்கதவைத் திறப்பாயாக என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

இனி, காலை மலர்ந்ததைக் கட்டுரைக்கத் தொடங்குகிறார்கள். கோழிகள் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு வைகறை நேரத்தைக் கூவிப் பிறருக்குத் தெரிவிக் கின்றன. அடுத்து, குருக்கத்தி எனப்படும் மாதவிக்கொடி படர்ந்துள்ள பந்தலின் மேல், குயில்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பலமுறையும் கூவிக்கூவி வைகறை வந்துற்ற தனையும், கதிரவன் கீழ்த்திசையில் புறப்பட்டு விட்டதனையும் தெரிவிக்கின்றன. இவ்வளவு நிகழ்ந்தும் - காலை மலர்ந்த பின்னும் - பந்து பொருந்திய கைவிரல்களை உடைய பெண்ணே! நப்பின்னாய்! உன்னுடைய கணவன் திருப்பெயரை நாங்கள் பாடிப் பரவ உன்னுடைய செக்கச் சிவந்த செந்தாமரைக் கைகொண்டு சிறப்புப் பொருந்திய கை வளைகள் ஒலியெழுப்ப, துயிலுணர்ந்து எழுந்துவந்து நாங்கள் எல்லோரும் மகிழும் வண்ணம் கதவைத் திறப்பாயாக! என்று நப்பின்னையை நயம்படக் கேட்டுக் கொள்கிறார்கள்.