பக்கம்:திருப்பாவை-விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ாக்டர் சி. பாலசுப்பிரமணியன் f) ()

இந்தத் திருப்பாசுரத்தில் இரண்டு முக்கிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று,

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

என்பதாகும். பொதுவாகப் பெண்களுக்குப் பிறந்தகத்தின் ஆசை எத்தனை வயதானாலும் போகாது. ஆனால், இங்கே நப்பின்னை புகுந்தகத்தைப் பெரிதும் உவக்கின்றாள் என்பதனை ‘நந்தகோபாலன் மருமகளே என்று பெண்கள் விளிப்பதனால் பெறப்படுகின்றது. தந்தைக்கு மகள்’ என்ற பெருமையைக் காட்டிலும் ‘மாமனாருக்கு மருமகள்’ என்று ஒரு பெண் வழங்கப்படுவதே பெருமை சேர்ப்பதாகும் என்ற ஒர் உயிரான கருத்து இப்பாசுரத்தின் வழி அறியப் படுகிறது. *

இரண்டாவதாக, அத்தை மகனை மைத்துனன் என்று சொல்கின்ற வழக்கு வைணவர்கள் இடையே உண்டு. மாமன் மகளை மணந்து கொள்ளும் முறைமை காரணமாக நப்பின்னையின் நாயகன் கண்ணன் ஆகிறான். மேலும் பிராட்டியின் வழியாகப் பிரானைச் சென்றடைய வேண்டும். அதாவது, நப்பின்னைப் பிராட்டியை முன்னிட்டுக் கிருஷ்ணனைச் சரணாகப் பெற வேண்டும் என்பது வைணவர்கள் கொள்கை. இதனைப் புருஷகாரம்’ என்பர். அம்மையின் அருளால் அப்பனை அடைவது என்பது சைவ வழக்கு சுருங்கச் சொன்னால் அம்மையின் அருளால் அவளுக்கு நாயகனான இறைவனைத் துணையாகப் பற்ற வேண்டும் என்பது இதனால் பெறப்படுகின்றது.

இவ்வாறு நப்பின்னையை விளித்து அவள்

துணையாலே கண்ணனுடைய பேரருளுக்குப் பாத்திரமாக வேண்டும் என்று. இயற்கை வருணனையும் தெய்வக்கோலச்